புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2025

ஒட்டாவா,வோட்டலூ பிரதேசங்களும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைக்கு அங்கீகாரம்! Top News [Friday 2025-05-16 06:00]

www.pungudutivuswiss.com


2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை - சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து வருகின்றன. சட்டமூலம் 104 ஆனது, இப்போது இன அழிப்பை நினைவுகூருதல் மற்றும் அதுதொடர்பான கற்பித்தல் மட்டில் மாநில அளவில் உறுதியான நிலையை எட்டியுள்ளது.

2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை - சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து வருகின்றன. சட்டமூலம் 104 ஆனது, இப்போது இன அழிப்பை நினைவுகூருதல் மற்றும் அதுதொடர்பான கற்பித்தல் மட்டில் மாநில அளவில் உறுதியான நிலையை எட்டியுள்ளது

தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், இன அழிப்பிலிருந்து உயிர் தப்பியவர்கள் தம் தலைமுறைகளினூடே அனுபவித்துவரும் துயர்களைப் பகர்ந்துகொள்ளவும், சிறிலங்கா அரசினால் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் தமிழின அழிப்புப் பற்றிய அறிவூட்டலை மேற்கொள்ளவும் இவ்வாரம் வழிவகுக்கும்.

இந்த ஆண்டு, ஒட்டாவா கத்தோலிக்க கல்விச் சபை (OSCB) தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது கனடாவின் தலைநகரான ஒட்டாவாப் பகுதியில் தமிழின அழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய விரிவாக்கமாகும்.

மேலும், இவ்வாண்டு, ஒன்ராறியோவின் மிகப் பெரிய காவற்றுறைச் சேவைகளில் ஒன்றான வோட்டலூ பிராந்திய காவற்றுறையும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

"தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை ஒன்ராறியோ முழுவதுமுள்ள கல்விச் சபைகளில் அதற்கான அங்கீகாரத்தையும் அனுசரணையையும் பெற்றுவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்" என்று ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும் ஸ்காபரோ - றூஜ் பார்க்கின் மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்தார். "கல்வி என்பது கடந்த கால நினைவுகளைப் பாதுகாக்கவும், அவற்றிலிருந்து நிவராணம் பெறும் செயற்பாட்டைத் தொடங்குவதற்கும் நம்மிடமுள்ள மிக சக்திவாய்ந்த ஒரு கருவியாகும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரொறன்ரோ வலய கல்விச் சபை (TDSB) தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ரொறன்ரோ கல்விச் சபையானது கனடாவின் மிகப்பெரிய கல்விச் சபையாகும். இது ஏறத்தாழ 250,000 மாணவர்களையும், 600 பள்ளிகளையும் தன்னகத்தே கொண்ட வட அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய கல்விச் சபைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதேபோல், ரொறன்ரோ வலய கத்தோலிக்க கல்விச் சபையும் (TCDSB) தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையைத் தொடர்ந்தும் அங்கீகரித்து வருகிறது. இக்கல்விச் சபையும் ஏறத்தாழ 85,000 மாணவர்களையும் 200 பள்ளிகளையும் கொண்டதாக இயங்குகிறது.

இதேபோல், யோர்க் பிராந்திய கல்விச் சபை (YRDSB), பீல் பிராந்திய கல்விச் சபை (PDSB) மற்றும் டூரம் வலய கல்விச் சபை (DDSB) உட்பட்ட ஒன்ராறியோவிலுள்ள பிற முக்கிய கல்விச் சபைகளும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையைக் கடைப்பிடிப்பதில் பங்குவகிக்கின்றன.

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையை மேலும் பல கல்விச் சபைகள் அங்கீகரித்து அதனனை நடைமுறைப்படுத்துவதால், தமிழின அழிப்புத் தொடர்பான கற்பித்தலில் ஒன்ராறியோ முன்னணி வகிக்கிறது. சட்டமூலம் 104, தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமையில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அதுதொடர்பான பட்டறைகளில் பங்குபற்றவும், கருத்தரங்குகளை நடத்தவும், தமிழின அழிப்பின் மூலங்களையும், தொடர்ந்தும் நடைபெறும் தமிழின அழிப்புப் பற்றி அறிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது

ad

ad