இதேவேளை கடந்த சில வருடங்கள் போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். எனினும் இதனையும் மீறி பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்தனர். அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என சமூகத்தின் பல தரப்பட்டவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கையில் செயற்படும் சுதந்திர பாலஸ்தீன அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இரண்டுநிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நினைவேந்தல் நினைவில் கவிதை வாசித்தல், உரைகள் போன்றவையும் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. |