மட்டக்களப்பு மாநகரசபையின் இரண்டாவது சபை அமர்வு வியாழக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது, துரைசிங்கம் மதன் என்ற உறுப்பினர் செம்மணி புதைக்குழிக்கு சர்வதேச விசாரணை கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தார். இதற்கு தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் உள்ளிட்ட சபையில் இருந்த அனைவரும் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. |