கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார். இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |