புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2025

www.pungudutivuswiss.com
நீதியை உறுதி செய்யுமா?- அரசாங்கத்திற்கு ஒரு சோதனை!
[Saturday 2025-08-09 17:00]


முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் பலவந்தமாக அழைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குளத்தில் இறந்து கிடந்ததாகக் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதேசவாசிகளை மேற்கோள் காட்டி அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் பலவந்தமாக அழைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் குளத்தில் இறந்து கிடந்ததாகக் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார். பிரதேசவாசிகளை மேற்கோள் காட்டி அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

குறித்த பதிவில், நான்கு இளைஞர்கள் முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு உலோகக் கழிவுகளைச் சேகரிப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் தாக்கப்பட்டதாகவும் சாணக்கியன் கூறியுள்ளார்.

அவர்களில் நால்வர் தப்பி ஓடிவிட்ட நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவரது உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் நீதியை உறுதி செய்யுமா அல்லது தண்டனையிலிருந்து விடுபடுமா என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு ஒரு சோதனை என்று அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad