செம்மணியில் இதுவரை 187 எலும்புக்கூடுகள் அடையாளம்- நேற்றும் 10! [Saturday 2025-08-30 07:00] |
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்றைய அகழ்வின் போது 10 எலும்புக்கூடு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது. |