யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 11 பேர் மட்டும் அல்லாமல் மேலும் பலருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்களிடம் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்கள், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் |