இந்த பட்டியலில் முதலிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளது. பாரிஸ் நகரத்தில் கிட்டத்தட்ட 900 சிறந்த உணவு விடுதிகள் மற்றும் 150 விருந்தகங்கள் ஆகியவை இதனை முதன்மை இடத்தில் வைத்துள்ளது. இந்த பட்டியலில் ஆவுஸ்திரேலியாவின் முக்கிய நகரமான மெல்போர்ன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 279 உயர்தர உணவகங்களும், 125 சொகுசு விருந்தகங்களும் உள்ளன. ஆவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிட்டத்தட்ட 94,000 லட்சாதிபதிகள் தங்கள் குடியிருப்புகளை வைத்துள்ளனர். இந்த தரவரிசையில் 3வது இடத்தில் சூரிச், 4வது இடம் மியாமி மற்றும் 5வது நகரான நியூயார்க்கும் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முதல் 10 வரையிலான இடங்களை லாஸ் ஏஞ்சல்ஸ், மிலன், சிங்கப்பூர், சியோல் மற்றும் லண்டன் ஆகிய நகரங்கள் பெற்றுள்ளனர். |