
சுவிட்சர்லாந்தில் நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நூதன முறையில் அவற்றை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
சூரிச் கான்டனில் திருடப்பட்ட நகைகளை பாணில் மறைத்து வைத்து நாட்டை விட்டு தப்ப முயன்ற இரண்டு திருடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரஞ்சு பதிவு எண் கொண்ட வாகனம் எல்லைச் சோதனைச் சாவடியில் சுங்க அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.
வாகனத்தில் இருந்த இருவரும் ரோமேனிய நாட்டு குடிமக்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சோதனையின் போது பல நகைகள், கடிகாரங்கள், தங்க நாணயம், பாணில் மறைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளன.
இந்த மதிப்புள்ள பொருட்கள் சூரிச் கான்டனில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொள்ளயைர்களை சென் கேலன் காவல்துறையினர் கைது செய்து சூரிச் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சூரிச் காவல்துறையினர் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.