அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் நேற்றையதினம் திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டது.13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அந்நிலையில், தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்றைய தினம் நடைபெற்ற சபை அமர்வில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தபோது அது தோற்கடிக்கப்பட்டது.
வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் இருவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒருவருமாக மூவர் வாக்களித்தனர்.
வரவு செலவு திட்டத்துக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நால்வரும் தேசிய மக்கள் சக்தியின் மூவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலா ஒருவர் என 10 பேர் வாக்களித்தனர்.
கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது திருவுளச்சீட்டு மூலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா தவிசாளராகவும் உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செபஸ்தியான் பிள்ளை லெனின் ரஞ்சித்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது