-

16 நவ., 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை - தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்! [Saturday 2025-11-15 16:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15)  தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. 
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம், கடந்த 11.11 2025 உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

ad

ad