கரைத்துரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் லோகேஸ்வரன் பதவி இராஜினாமா..!
கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது உள்ளூராட்சி நிர்வாகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் குறிப்பிடத்தகுந்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தனது உறுப்பினராக உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (இ.த.க), கட்சியின் ஒழுக்கவியல் விதிமுறைகளின் அடிப்படையில் அவர்மீது உள்ளக விசாரணை மற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படக் கூடாது என்பதையும், கட்சியின் மரியாதை குலைவதைத் தவிர்க்க வேண்டியதையும் கருத்தில் கொண்டு, கட்சியின் மேலதிகாரிகள் அவரை தகுந்த முடிவெடுக்க அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சின்னராசா யோகேஸ்வரன் தனது தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். இதுபொதுமக்களின் அதிருப்தியை குறைக்கும் நடவடிக்கையாகவும், கட்சியின் ஒழுங்கு மற்றும் நற்பெயரை பாதுகாக்கும் முயற்சியாகவும், அரசியல் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் செயற்பாடாகவும் கருதப்படுகிறது.
இராஜினாமா வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 22ம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறும் என உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.



