-

28 ஜன., 2026

அஜித் பவார் உயிரிழப்பு |விமான விபத்து புலனாய்வு அமைப்பு விரைவு.. கருப்புப் பெட்டியை மீட்கத் திட்டம்!

www.pungudutivuswiss.com
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர்
உயிரிழந்த கோர விமான விபத்து குறித்து விரிவான விசாரணை
நடத்த, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தனது பணிகளைத் தொடங்கியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, மத்திய அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், டெல்லியில் இருந்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு இன்று காலை பாராமதிக்கு விரைந்துள்ளது.

அஜித் பவார் விமான விபத்து
அஜித் பவார் விமான விபத்துPt web
இந்தக் குழு விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 விமானத்தின் கருப்புப் பெட்டியை (Black Box) மீட்டு, விபத்துக்கு முன் விமானிகளின் உரையாடல் மற்றும் விமானத்தின் தொழில்நுட்ப நிலை குறித்து ஆய்வு செய்யும். மேலும், விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து விமானத்தின் பராமரிப்புப் பதிவுகள், விமானிகளின் அனுபவம், தகுதிச் சான்றிதழ்கள் விமானம் தரையிறங்கும் போது நிலவிய வானிலை, ஓடுதளத்தின் நிலை மற்றும் விமானத்தின் என்ஜின்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டதா ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தும்.
அஜித் பவார் விமான விபத்து
மகாராஷ்டிரா | விபத்துக்குள்ளான விமானம்.. உயிரிழந்த துணை முதல்வர்.. யார் இந்த அஜித் பவார்?
கருப்புப் பெட்டி (Black Box) என்றால் என்ன?
பெயரில் 'கருப்பு' என்று இருந்தாலும், உண்மையில் இது மிகப்பொலிவான ஆரஞ்சு நிறத்தில் இருக்கு

ad

ad