-

3 ஜன., 2026

இலங்கை MGR அல்லவா நடிப்பில் வெளுத்து வாங்கும் டக்கி மாமா

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு டெல்லியில் இருந்து யார் வந்தாலும், முதலில் டக்கி

பார்காமல் போவதே இல்லை. காரணம் இந்திய உளவுத்துறைக்கு
அவ்வளவு வேண்டப்பட்ட நபர். ஒரு சமயம் டெல்லி அதிகாரிகள் யாழ் வந்தவேளை, யாழில் உள்ள இந்திய துணைத் தூவர், டக்கி மாமாவை அறிமுகப் படுத்தும் போது இலங்கை எம்.ஜி.ஆர் இவர் தான் என்றார். இன்று டக்கி மாமா சிறை சென்று, பின்னர் தனக்கு வயிற்றோட்டம் என்று கூறி, தலை சுற்றி கீழே விழுவது போல நடித்து வைத்தியசாலை சென்றுவிட்டார்.

தற்போது கண்களை மூடிக் கொண்டு காலை நீட்டி படுத்து, தன்னால் எதனையும் செய்ய முடியாது என்று கூறி தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருக்க அனுமதி கோரியுள்ளார். எத்தனை தமிழர்களை, அப்பாவிப் பெண்களை, சிறுவர்களை EPDP போட்டுத் தள்ளியது ? ஊடகவியலாளர் நிமலராஜ் கொலை, அறிப்பாளர் KS ராஜா, என்று பட்டியல் நீண்டு கொண்டு போகிறது.

அரசாங்கத்திற்கு யாரைப் பிடிக்கவில்லையே, அவர்கள் கை காட்டு அனைவரையும் போட்டுத் தள்ளினார் டக்ளஸ் தேவானத்தா . இதற்காக தான் இவர் குழுவுக்கு அரசாங்கம் துப்பாக்கிகளை கொடுத்து இருந்தது. இன்று அதே துப்பாகியால் கைதாகி, பின்னர் வைத்தியசாலை கட்டிலில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்களை கொல்ல சதி செய்தவர் டக்ளஸ் என்பதனை எவரும் மறந்துவிட முடியாது.

இது வெறும் அரசியல் பழி வாங்கலா ? இல்லை நேர்மையான முறையில் நடக்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது. காரணம் தான் அரசு பக்கம் இணைந்து செயல்பட உள்ளதாக டக்கி மாமா அனுராவுக்கு தூது அனுப்பியுள்ளதாகவும் பேச்சு அடி பட ஆரம்பித்துள்ளது. இதனால் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்

ad

ad