ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: டைரக்டர் சீமான் பேட்டிChennai செவ்வாய்க்கிழமை, மே 24, 6:23 PM IST

சென்னை, மே. 24- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து டைரக்டர் சீமான் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 30-வது நினைவு தினத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளோம். தமிழ் தாழ்ந்துவிட கூடாது. தமிழன் வீழ்ந்துவிட கூடாது என்று போராடியவர் சி.பா.ஆதித்தனார். பாமரனுக்கும் தமிழ் மொழி போய் சேரவேண்டும் என்று “தினத்தந்தி”யை தொடங்கி இன்றளவும் வெற்றி நடைபோடுகிறது. அவர் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை, அவர் எந்த லட்சியத்துக்காக தொடங்கினாரோ அந்த லட்சியத்துடன் பிள்ளைகளான நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். அவரது கனவு நனவாகும்வரை, லட்சிய நோக்கத்தை அடையும் வரை அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:- கேள்வி: ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்பதை அறிவிக்க உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில்: உலக நாடுகளின் ஆதரவை பெற தலைவர்களை சந்திக்கும் உள்ளரசியல் நடந்து வருகிறது. பல்வேறு தளங்களில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை இலங்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்று இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்தியாவின் மவுனத்தை பார்க்கும்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கான மேலும் பல ஆவணங்கள் விரைவில் வெளிவர உள்ளது. அதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கும் என்று நினைக்கிறோம். கேள்வி: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோருவீர்களா? பதில்: பொருளாதார தடை மட்டுமல்ல. இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படு கொலை செய்த போர்க்குற்ற வாளி. ராஜபக்சே போர்க்குற்ற வாளி என்பதை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே தெரிவித்துள்ளார். மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார்கள். எனவே அந்த அறிக்கையை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!
கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது.
இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள்.
இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள்.
இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள்.
புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் பிரதீபன் என்பவரிடம் விசாரணை நடத்துகின்றமைக்கும் உத்தேசித்து உள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தனர்.
நெதர்லாந்தில் 38 பேர் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அடையாளம் கண்டு உள்ளார்கள்.
இவர்களில் மிக முக்கிய புள்ளிகளான இராமச்சந்திரன், சிறிரங்கம் ஆகியோரை கடந்த 13 மாதமாக தடுத்து வைத்து உள்ளார்கள்.
நெதர்லாந்தில் புலிகளின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் சோதனை நடவடிக்கைகளின்போது இப்புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.
இந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.
கடந்த வாரம் நோர்வேக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டது. நோர்வேயில் புலிகளின் தலைவராக செயல்பட்டு வந்த நெடியவனை பிடித்து விசாரித்தனர்.
ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்: டைரக்டர் சீமான் பேட்டி
Chennai செவ்வாய்க்கிழமை, மே 24, 6:23 PM IST
சென்னை, மே. 24-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து டைரக்டர் சீமான் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 30-வது நினைவு தினத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளோம். தமிழ் தாழ்ந்துவிட கூடாது. தமிழன் வீழ்ந்துவிட கூடாது என்று போராடியவர் சி.பா.ஆதித்தனார்.
பாமரனுக்கும் தமிழ் மொழி போய் சேரவேண்டும் என்று “தினத்தந்தி”யை தொடங்கி இன்றளவும் வெற்றி நடைபோடுகிறது. அவர் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தை, அவர் எந்த லட்சியத்துக்காக தொடங்கினாரோ அந்த லட்சியத்துடன் பிள்ளைகளான நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம்.
அவரது கனவு நனவாகும்வரை, லட்சிய நோக்கத்தை அடையும் வரை அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:-
கேள்வி: ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்பதை அறிவிக்க உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: உலக நாடுகளின் ஆதரவை பெற தலைவர்களை சந்திக்கும் உள்ளரசியல் நடந்து வருகிறது. பல்வேறு தளங்களில் ஆதரவு திரட்டப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை இலங்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்று இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இந்தியாவின் மவுனத்தை பார்க்கும்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கான மேலும் பல ஆவணங்கள் விரைவில் வெளிவர உள்ளது. அதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருக்கும் என்று நினைக்கிறோம்.
கேள்வி: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோருவீர்களா?
பதில்: பொருளாதார தடை மட்டுமல்ல. இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படு கொலை செய்த போர்க்குற்ற வாளி. ராஜபக்சே போர்க்குற்ற வாளி என்பதை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே தெரிவித்துள்ளார். மக்கள் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார்கள். எனவே அந்த அறிக்கையை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்!
இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள்.
இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள்.
இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள்.
புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் பிரதீபன் என்பவரிடம் விசாரணை நடத்துகின்றமைக்கும் உத்தேசித்து உள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தனர்.
நெதர்லாந்தில் 38 பேர் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அடையாளம் கண்டு உள்ளார்கள்.
இவர்களில் மிக முக்கிய புள்ளிகளான இராமச்சந்திரன், சிறிரங்கம் ஆகியோரை கடந்த 13 மாதமாக தடுத்து வைத்து உள்ளார்கள்.
நெதர்லாந்தில் புலிகளின் நிதிச் செயல்பாடுகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் சோதனை நடவடிக்கைகளின்போது இப்புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்று உள்ளன.
இந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.
கடந்த வாரம் நோர்வேக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டது. நோர்வேயில் புலிகளின் தலைவராக செயல்பட்டு வந்த நெடியவனை பிடித்து விசாரித்தனர்.
ராஜிவ் கொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று இந்தியாவின் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டினார்.
இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒருவரான கே.பி இந்திய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கி இருந்த பேட்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிராமணிய எதிர்ப்பு கொள்கை காரணமாகவே ராஜிவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் வெறுத்தார் என்றும் படுகொலை செய்ய நேரடியாக உத்தரவு பிறப்பித்தார் என்றும் கூறி இருந்தார். இது தொடர்காகவே ஜெயலலிதா ஊடகவியலாளர்களுக்கு கருத்துச் சொல்லி இருந்தார்.
இவர் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களின் ஒருவரான கே.பி இந்திய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கி இருந்த பேட்டியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிராமணிய எதிர்ப்பு கொள்கை காரணமாகவே ராஜிவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் வெறுத்தார் என்றும் படுகொலை செய்ய நேரடியாக உத்தரவு பிறப்பித்தார் என்றும் கூறி இருந்தார்.
பாரிய குற்றம் சு
மத்தப்பட்டோர் அரியணையில் அப்பாவிகள் சிறையறையில்: மாவை.எம்.பி
யாழ். சிறைச்சாலையில் விடுதலைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டும் அவர்களை இதுவரை விடுதலை செய்யாமல் சுமார் ஆறுமாதங்களுக்கு மேலாக அடைத்து வைத்திருக்கும் கைதிகள் இரண்டு நாட்களாக யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கைதிகளை மாவை சேனாதிராசா எம்.பி இன்று பார்வையிட்ட பின்னர் தமிழ்.சி.என்.என்னுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
நீதிமன்றத்தினால் விடுதலை செய்வதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டும் சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிக்கொண்டு அவர்களை இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.
அரசுடனான பேச்சிலும் நாங்கள் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
மீண்டுமொருமுறை இக்கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சுடனும் சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் பேசவுள்ளோம்.
யாழ். சிறைச்சாலையில் இவ்வாறு 28 கைதிகள் விசாரணை எதுவமின்றி தடுத்து வைத்திருப்பது போன்று பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் இதுவரை விசாரணை எதுவுமின்றியும் தீர்ப்பு வழங்கப்பட்டும் விடுதலை செய்யப்படாமலும் உள்ளனர்.
இதே வேளை வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதாக அரசு கூறிவிட்டு அதனை தராமல் ஏமாற்றுவது காணாமல் போனவர்களின் பெயர்பட்டியல் இன்னும் நீளமாக உள்ளதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இப்பெயர் விபரங்ளை தருவதாக மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார்கள் அவ்வாறு தராவிடத்து காணாமல் போனோர் கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை திறட்டி மனித உரிமை ஆணைக்குழு . மன்னிப்புச்சபை என்பவற்றில் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.
மாவை. சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினாருமான நேர்காணல் ..
யாழ். சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீர்ப்பு வழங்கியும் விடுதலை செய்யப்படாதவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.
பெயா கைதுசெய்யப்பட்ட திகதி
ராயுசுரேஸ் கிருஸ்ரினா 2006- 01-06
சுப்ரமணியம் செல்வநாயகம் 2008-5-21
பிரியந்த நிமால் குணரத்ண 2007-02-03
பத்மநாதன் தனபாலசிங்கம் 2007-07-10
புவனேந்திரன் சதிஸ்வரன் 2007-08-10
இராமையா கஜமோகன் 2008-03-01
தங்கராசா விவேகானந்தராஜ் 2009-06-16
இராஜரட்ணம் பத்மநாதன் 2009-08-19
இவர்களுடன் நடராஜா இராஜேஸ்வரி (26.12.2008) ஆகிய இரு பெண்களடங்களாக இன்னும் பலர் விசாரணைகளின்றியும் வருடக்கணக்காக இச்சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.
அரசும் கூட்டமைப்பும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டதன் அடிப்படையிலான இவ்விடயங்களையே இந்த அரசால் நிறைவேற்றாமல் காலம் கடத்தும் போது தமிழருக்கான நியாயமான தீர்வை தருவதென்பது குதிரைக் கொம்புதான் என்பதே இன்று பலரின் கருத்தாகும்