-
21 செப்., 2013
அனந்தி சசிதரன் மீது வழக்குத் தாக்கல் செய்வோம்: ஈபிடிபி
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதும், ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ஆனால் அவர்மீது நாம் வழக்குத் தாக்கல் செய்வோம் என ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
“மாகாண சபை போதுமானதல்ல; இலக்கு ஒன்றை அடைவதற்கான வழிமுறையே” – தர்மலிங்கம் சித்தார்த்தன் |
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, தனது தனிப்பட்ட அரசியல் பயணம், எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் தொடர்பாகப் புதினப்பலகையின் (நன்றி )செந்தூரன் சந்திரநாதனுடன் உரையாடினார் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன். [தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - புளொட் அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.] |
அமெ. ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை முகப்பில் ஈழப்பெண்கள்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, "ரூ வோல்க் த ஏர்த் இன் சேவ்ரி' (To Walk the Earth in Safety) என்ற அறிக்கையின் முகப்பு அட்டையில், வடக்கு மாகாணத்தில் மிதிவெடி அகற்றும்
தற்போது வந்த செய்தி
வட மாகான சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 29-32 இடங்களை பிடிக்கும் .
எமது செய்தியாளர்களின் கருத்து கணிப்பின் படி இந்த தகவல் வந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் முன்னணியில் இருந்த விக்கினேஸ்வர்ன் அவர்களுக்கும் ஆனந்தி சசிதரனுக்கும் இடையே முதலாம் இடத்தை அடைய கடும் போட்டி நிலவுகிறது கடந்த இரவு நடைபெற்ற அனந்தி மீதான தாக்குதலுக்கு பிறகு மேலும் ஆதரவு இவருக்கு கூடும் என கணிக்கப்படுகிறது . 3 ஆம் 4 ஆம் 5 ஆம் இடங்களுக்கு கஜதீபன் ,சித்தார்த்தன்,ஐங்கரநேசன்,சிவஞானம் ஆகியோர் போட்டியில் இருப்பதாக அறிகிறோம்.மற்றும் சிவாஜிலிங்கம் நல்ல ஆதரவை பெறக்கூடும்.கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் நிலைமை மோசமாக உள்ளது .இங்கே ஸ்ரீதரன் குழு அவரை தனக்கு போட்டியாக கிளிநொச்சியில் தலை எடுப்பாரோ என்ற சந்தேகத்தில் ஒதுக்கி வருவதாக அறிகிறோம்.கூட்டுக் கட்சிகள் என்ற நிலையில் இருந்து விலகி தமிழரசுக் கட்சி என்ற நிலைய ஸ்ரீதரன் எடுத்துள்ளார் .அவரது ஆதரவு வேட்பாளர்கள் வெல்வதற்கான சூழல் இருக்கிறது மன்னர் வவுனியா மாவட்டங்களில் அரச தரப்பு கடும் போட்டியில் ஈடுபடுகிறது.முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் ராணுவத்தின் குளறுபடிக்கான வாய்ப்பு நிலவுகிறது .மொத்தமாக வாக்களிப்பு வீதம் கூடினால் 32 இடங்கள் வரை கூட்டமைப்பு பெறலாம்.இராணுவம் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் வன்முறைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது இப்போதே .ஸ்ரீதரன்.ஆனந்தி வீடுகளில் நடந்தேறி விட்டது

Latest News
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் காரியாலயம் இராணுவ புலனாய்வாளர்களால் சுற்றிவளைப்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமாகிய அறிவகத்தை சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தும் வகையில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.
20 செப்., 2013
கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈபிடிபி மற்றும் இராணுவத்தினர்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்பி கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரும் ஈபிடிபி ஒட்டுக்குழுவும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவது குறித்து உடன் நடவடிக்கை
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய் எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப் பிரச்சினைஐ நா மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான் எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான வீட்டுக்கு புள்ளடி இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்
நன்றியோடு 18.09.2013
ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
தலைமையகம் சுவிட்சர்லாந்து
tthamil 8@gmail .com

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)