-

19 டிச., 2025

வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்

www.pungudutivuswiss.com

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியீடு - மாவட்டங்களில் என்ன நிலவரம்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப்படம்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் என்ன நிலவரம்?

தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

  • எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 6,41,14,587
  • எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை: 5,43,76,755
  • தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832
  • தற்போது உள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள்: சுமார் 2. 77 கோடி
  • ஆண் வாக்காளர்கள்: சுமார் 2. 66 கோடி
  • மூன்றாம் பாலினம்: 7,191
  • மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம்
தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

பட மூலாதாரம்,TNelectionsCEO

சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூரில் என்ன நிலவரம்?

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் 35.58% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 40.04 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் இருந்த நிலையில், தற்போதைய வரைவுப் பட்டியலில் 25.79 லட்சம் பெயர்களே உள்ளன. மொத்தம் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு, 1,19,489 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர், 1,08,360 வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 3,99,159 வாக்காளர்கள் குடிபெயர்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர், 23,202 வாக்காளர்கள் இரட்டைப் பதிவுகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோலவே, விருதுநகர் மாவட்டத்தில், 1,89,964 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் மாவட்டத்தில் 14,36,521 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தஞ்சாவூர் வரைவுப் பட்டியலைப் பொருத்தவரை, 20,98,561 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், 2.06 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் மொத்தம் 6,19,777 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 29,62,449 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன.

இதேபோல, ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் 23% பெயர்கள் நீக்கம்

தூத்துக்குடியில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான கணக்கின்படி, அம்மாவட்டத்தில் 13,28,158 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு 12,54,525 வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், 1,39,587 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில், 3,24,894 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவுப் பட்டியலில் தற்போது 16,09,553 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில், 23% பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் மணிஷ் நாரணவரே வெளியிட்ட வரைவுப் பட்டியலின்படி, தற்போது 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் 18,81,144 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

மதுரை

மதுரையில், 23,69,631 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 3.80 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,03,917 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், 81,515 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியீடு - மாவட்டங்களில் என்ன நிலவரம்?
படக்குறிப்பு,கோப்புப் படம்

தொடங்கியது எப்போது?

இந்தியாவில், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின.

முதல் கட்டமாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இரண்டு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இறுதியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வரைவுப் பட்டியலில் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

குறைந்தபட்சம் மூன்று முறை சென்று விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே வரைவுப் பட்டியலை உருவாக்கியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாகப் பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

ad

ad