-
10 ஏப்., 2014
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை
1991 - 92, 1992 - 93 ஆண்டுகளில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.
வருமானவரித்துறை தொடர்ந்த இந்த வழக்கில் 10.04.2014 வியாழக்கிழமை நேரில் ஆஜராகவே வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை.
அதிமுகவில் இணைந்தார் ஜே.கே.ரித்தீஷ்

ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இடத்தில், ராமநாதபுரம் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் வியாழக்கிழமை சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரனி முன்னாள் செயலாளர் அ.தி.செந்துரேசுவரன் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பிறகு, ஜே.கே.ரித்தீஷ், கே.நாகநாதசேதுபதி, அ.தி.செந்துரேசுவரன் அதிமுகவில் இணைந்தனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
பனிவிழும் மலர்வனம் திரைப்படம் வெளியீடு
பிரிட்டன் வாழ் புங்குடுதீவு இளம் சமுதாயத்தினால் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்ட இந்த திரை படம் எதிர்வரும் அன்று திரையிடப் படவுள்ளது கிடைக்கும் நிதி புங்குடுதீவில் சர்வோதயத்தினால் நடத்தப்படும் கணணி மையத்துக்கு வழங்கப்படும்
பிரிட்டன் வாழ் புங்குடுதீவு இளம் சமுதாயத்தினால் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்ட இந்த திரை படம் எதிர்வரும் அன்று திரையிடப் படவுள்ளது கிடைக்கும் நிதி புங்குடுதீவில் சர்வோதயத்தினால் நடத்தப்படும் கணணி மையத்துக்கு வழங்கப்படும்
DATE - Will be screened on the Saturday 12th April 2014
VENUE - Safari Cinema (Harrow)
TIME - 5.00 pm.
தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி.
'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)