பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது. வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில்
-
19 ஆக., 2019
வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்
வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு 1500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது. பல
ஓடிப்போன கோத்தா போட்டியிட முடியாது
நாட்டை விட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கமுடியாது.வேறுநாடொன்றின் பிரஜையான ஒருவர் நாட்டில் நடைமுறை அரசியலமைப்புக்கிணங்க தேர்தலில் நிற்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
பொறுப்புக்கூறி விட்டு போட்டியிடட்டும்நா- உ .சி.சிவமோகன்
இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்து விட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோத்தா குறித்து இன்று விசாரணை
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளது.கோத்தாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி
18 ஆக., 2019
கோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இம்முறை போட்டியிடுவது உறுதி-சஜித் பிரேமதாஸ
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் சிக்கிய இலங்கையர்கள்
சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் மெக்சிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
கோத்தாவுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம்- சித்தார்தன்
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோத்தாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் கடந்த வாரம், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்
ரணிலை சந்தித்த தமிழ்க்கட்சி தலைவர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்காவுக்கும், தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு இந்த சந்திப்புஇடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
17 ஆக., 2019
ஐதேமுவின் முக்கிய கலந்துரையாடல் தோல்வி
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவுற்றது.
மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி
மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனுமகள் வருவதில் தாமதம் ஆவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்
யாழ் அபிவிருத்தி தொடர்பில் ரணில் தலமையில் கூட்டம்
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
ஐதேக கூட்டணி பங்காளிகளின் முக்கிய கூட்டம் இன்று
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது
தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா!
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலை இலக்கு வைத்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார்
|
16 ஆக., 2019
விக்கியை போட்டிக்கு அழைக்கும் சுதந்திரக் கட்சி
ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜேவிபி வேட்பாளராக அநுரகுமார!
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோத்தாவின் கடவுச்சீட்டு- தொடங்கியது விசாரணை
முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்ஷ, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலாலியில் இருந்து ஒக்ரோபரில் விமான சேவை
பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)