தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
-
8 நவ., 2019
சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் சிறுமியின் சிறிய தந்தையும் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 நவ., 2019
கோத்தா வந்ததும் தூக்குவேன்- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும்
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்கும், ஆவணத்தை சமர்ப்பிக்க முடியுமா?
கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.
திஸாநாயக்கவின் இரு பாதுகாவலர்கள் கைது!
நுவரெலியா - கினிஹத்தேன, பொல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிசேனவின் இறுதி உரை இன்று
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு என்ன? இன்று அறிவிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு நியமனம் வழங்க அனுமதி
புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.பட்டப்படிப்பை நிறைவு செய்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கே இவ்வாறு வேலைவாய்ப்பு
6 நவ., 2019
திருக்கேதீஸ்வர வழக்கில் முன்னிலையான சுமந்திரன் - கூட்டமைப்பை எச்சரிக்கும் மறைமாவட்டம்
மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர், இவ்வாறு தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பொது அறிவிப்பு இன்று
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் தொடர்பாக இன்று பொது அறிக்கை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சமஷ்டி வேறு ஐக்கியம் வேறு! - மகிந்தவுக்கு சஜித் பதிலடி
ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதே தனது பொறுப்பு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடும் துவேசத்தை கிளப்பி வாக்கு பெறும் நோக்கம் தமிழர்களுக்கு ஒருபோதும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படாது, நாடு பிளவுபட அனுமதிக்க மாட்டோம்: மஹிந்த இறுமாப்பு
தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சமஷ்டி வழங்கப்படாது என இறுக்கமாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் கடும்தொனியில் கூறினார்.
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசிய முன்னணி
இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேசியகட்சிகள் தமிழர்பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியும் தமது பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்,
கோத்தாவுக்கு ததேகூ எம்பிகள் ஆதரவு?
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
5 நவ., 2019
சஜித்தை ஆதரிக்க முடிவு செய்தது ஏன்? - மன்னாரில் சுமந்திரன் விளக்கம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மன்னார் மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)