முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லை? குறித்த உத்தரவை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது |
-
12 அக்., 2022
மைத்திரியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!
அகதிகளுக்கு அதிகம் உதவும் சுவிஸ்!
நேற்று வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட அகதிகளுக்கு அதிகம் உதவுவதாக தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்தோருக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் மேற்கொண்ட அந்த ஆய்வு, சுவிட்சர்லாந்து ஆபத்தான நடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஆண்டுதோறும் வரவேற்பதாகவும், மற்ற நாடுகளைவிட சிறந்தவகையில் அவர்களை குடியமர்த்த உதவுவதாகவும் தெரிவிக்கிறது |
10 அக்., 2022
தமிழரசுப் பதவிகளில் இருந்து விலகினார் பரஞ்சோதி
தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஓர் இயலாமையான நிலையில் காணப்படுகின்றார் அதனால், கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் தான் விலகுவதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்துள்ளார் |
இனி காலஅவகாசம் வழங்கவே கூடாது
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளையும், சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஐ.நாவும், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைவிடுத்து இலங்கை அரசுக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்கி வந்தால் அதில் எந்தப் பயனும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார் |
3 இராணுவ அதிகாரிகளுக்கு தடை போடவுள்ள கனடா
இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக கனடா தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர் |
காலிமுகத்திடலில் பதற்றம் - போராட்டக்காரர்கள் துரத்திப் பிடித்து கைது!
கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது |
5 அக்., 2022
சிறீதர் திரையரங்கிற்கு கடத்தபட்ட மீனவ தலைவர்கள்?
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும், கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் |
கனடா மாணவர் வீசா விண்ணப்பம் 10 மடங்கு அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார் |
தீவுகளை அபிவிருத்தி செய்ய புதிய அதிகாரசபை
நாடெங்கும் உள்ள தீவுக் கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில், இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனம் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தெரிவித்தார் |
சுவிற்சர்லாந்தின் மாநில அரசின் தேர்தலில் புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த வரலாற்று வெற்றி
3 அக்., 2022
பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
யாழ்ப்பாணம்- வல்வெட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது |
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்! [Monday 2022-10-03 07:00]
றுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்! [Monday 2022-10-03 07:00] |
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று காலமானார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவருக்கு, பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெளத்த ஆதீக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
ஜெனிவாவில் நெருக்கடி- 6 நாடுகள் மட்டுமே இலங்கைக்காக கைதூக்கும்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன |
ஜெனிவாவில் நெருக்கடி- 6 நாடுகள் மட்டுமே இலங்கைக்காக கைதூக்கும்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
15 வயது மாணவி வன்புணர்வு!- யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் கைது.
யாழ்ப்பாணத்தில், காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |