-
21 மே, 2023
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால்... மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை
புதிய புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்படுகிறது
![]() சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார் |
இலத்திரனியல் கடவுச்சீட்டு இந்த வருடம் அறிமுகம்!
![]() இலத்திரனியல் கடவுச்சீட்டை இந்த வருடம் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். |
20 மே, 2023
ட்ரூடோவின் அறிக்கைக்கு கனடியத் தூதுவரை அழைத்து கண்டித்தது வெளிவிவகார அமைச்சு!
![]() முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களிற்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது |
19 மே, 2023
கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள்
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார் |
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை
![]() இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
18 மே, 2023
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால்..! ஆவலுடன் காத்திருக்கும் சென்னை, லக்னோ அணிகள்
இன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற
பதற்றத்திற்குள் மத்தியில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுப்பு!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அதிகாலையில் நந்திக்கடலில் அஞ்சலி
![]() முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் ,இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |
16 மே, 2023
பண்ணை நாகபூசணி அம்மன் சிலை அகற்ற கோரி வழக்கு தள்ளுபடி
இணக்கமின்றி முடிந்த பேச்சுவார்த்தை!
![]() தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்புக்கும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவுக்கு வந்தது |
கோட்டா கொலை முயற்சி வழக்கில் இருந்து ஆரூரன் 14 ஆண்டுகளின் பின் விடுதலை!
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் |
துபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன்! - திடுக்கிடும் உண்மைகள்.
![]() யாழ்ப்பாணம் சுண்டுக்குழிப் பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் |
மறுக்க முடியாத ஆதாரங்களை வெளியிடவுள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை! [Tuesday 2023-05-16 07:00]
![]() இலங்கையின் வட, கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் பெரும்பான்மையாகத் தமிழர்களே வாழ்ந்தனர் என்பதை மறுதலிக்க முடியாதபடி நிரூபிப்பதற்கான ஆதாரங்களை நாம் திரட்டியிருக்கின்றோம். அவற்றை எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வெளியிடவிருக்கின்றோம் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். |
வவுனியாவில் ரெலோ-- அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!
![]() ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவிநீக்கம்!
![]() மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. |
14 மே, 2023
நாளை திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் விரல் அடையாளத்தை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம்
![]() அரச ஊழியர்கள், நாளை திங்கட்கிழமை (15) முதல் பணிக்குச் செல்லும்போதும் பணியிலிருந்து வெளியேறும் போதும் கைவிரல் அடையாளத்தை கணினியில் பதிவு செய்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது |