புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2023

இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால்..! ஆவலுடன் காத்திருக்கும் சென்னை, லக்னோ அணிகள்

www.pungudutivuswiss.com
இன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற 
வேண்டுமென இரு அணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
 ஐதராபாத், ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. Also Read - ஐபிஎல் : கால்பந்து அணியின் ஜெர்சியில் விளையாடும் லக்னோ..! இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. Also Read - ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி, ரோகித்தை பின்னுக்கு தள்ளிய அயர்லாது வீரர்.! ரன்-ரேட்டில் (+0.166) வலுவான நிலையை எட்டிய பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையலாம். ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும். எனவே அந்த அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. Also Read - ஐ.பி.எல். 'பிளே-ஆப்' சுற்று டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடக்கம் இதற்கிடையில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி வெற்றிபெறவேண்டும் என இரு அணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அந்த இரு அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகும். ஏனென்றால், தற்போது சென்னை, லக்னோ இரு அணிகளும் 15 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட ஒரே ரன்ரேட்டில் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளன. இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றால், இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்துவிடும். பின்னர் கடைசி ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு(இன்றைய போட்டியில் தோற்கும் பட்சத்தில்), ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் போட்டியிடும். இந்த 5 அணிகளில் எந்த அணி தனது கடைசி போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறுகிறதே, அந்த அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடிக்கும்.

ad

ad