![]() கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் விவரமாகக் கேட்டறிந்துள்ளார். |
-
18 மார்., 2024
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையை அறிந்து கொள்வதற்கு அமெரிக்கா உதவும்!
ரணிலுக்கு செக் வைத்த பசில்
![]() தேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது |
17 மார்., 2024
தெப்பம் மட்டும் கரையொதுங்கியது - மீனவரைக் காணவில்லை!
![]() வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் நேற்று அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையொதுங்கி உள்ளது. மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார். காணாமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர் |
கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை - ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ்க் கட்சிகள் முடிவு
![]() வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். |
15 மார்., 2024
வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்க கோரி நெடுங்கேணியில் பேரணி
![]() வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக் கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் பேரணி முன்னெடுக்கப்பட்டது. |
10 மார்., 2024
உதைபந்தாட்ட வரலாற்றில் நூறாவது சுற்று போட்டி வெற்றியை பெற்று சாதனை படைத்தது யங்ஸ்டார்
8 மார்., 2024
சிவராத்திரி வழிபாட்டை தடுக்க சதி - வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் கைது
![]() வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். |
ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் ஒரே வீட்டுக்குள் படுகொலை
![]() கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர். |
சுழிபுரம் புத்தர் சிலைக்கு எதிராக நாளை போராட்டத்துக்கு அழைப்பு
![]() சுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். |
ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பியோடியது எப்படி?- தனது நூலில் விபரித்துள்ள கோட்டா.
![]() ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகொப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன் என, தமது பதவி விலகல் அனுபவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் |
7 மார்., 2024
பிரான்சில் ரயில்பாதை அமைக்கும் பணியில் விபத்து- தமிழர் ஒருவர் பலி!
![]() பிரான்ஸில் துலூஸைக் கடக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பாலம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இணையத் தள ஆசிரியர் சிஐடியினரால் கைது
![]() தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியர் ஜீ.பி. நிஸ்ஸங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் |
திருப்பி அடிக்கும் உக்ரைன்: கதிகலங்கும் ரஷ்ய
![]() ரஷியாவின் மற்றுமொரு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், தற்போது திருப்பி அடிக்கும் உகரைன் ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது |
29 பிப்., 2024
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு சுருக்கமாக முடிக்கப்படக் கூடிய வாய்ப்பு
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் சித்திரை மாதம் 25 ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார் |
26 பிப்., 2024
ஐந்தரை மாத குழந்தையை கைவிட்டு தப்பியோடிய இளம் ஜோடி!
![]() மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்தரை மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகி விட்டனர். |
24 பிப்., 2024
தமிழரசில் சமரசக் குழு அமைப்பு
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. |
21 பிப்., 2024
குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கொலை செய்த மருத்துவர்கள்! - வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம். [
![]() கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். |
மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்க தனிநபர் பிரேரணை
![]() பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது. |
கச்சத்தீவு திருவிழாவை இரத்து செய்வதாக பயண ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!
![]() கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் |
நாய் குறுக்கே பாய்ந்ததால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பலி
![]() யாழ்ப்பாணம் - நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவன் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். |