வெள்ளி, அக்டோபர் 18, 2013

ஐ.ரி.வி வெளியிட்ட போர் குற்ற வாக்குமூலம் ! 

இலங்கையில் யுத்தத்தின்போது தான் இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டும் வருகிறது. ஆனால் போருக்குப் பின்னர் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களையும்
இலங்கை இராணுவம் விட்டபாடாக இல்லை. நேற்றைய தினம்(17) இரவு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும், ஐ.ரி.வி என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி, இது தொடர்பாக 2 நிமிட ஆவணச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இரவு 10 மணிச் செய்தி இடம்பெற்றவேளையே இந்தச் செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல மில்லியன் மக்கள் பார்க்கும் ஆங்கிலத் தொலைக்காட்சியாக ஐ.ரீ.வி உள்ளது. அதுவும் இரவு 10.00 மணிச் செய்தி என்பது மிகவும் பிரபல்யமான செய்தி ஆகும். இன் நேரத்தில் குறிப்பிட்ட 2 நிமிட ஆவணப் படம் காண்பிக்கப்பட்டுள்ள விடையம், இலங்கை அரசை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறையில் அடைத்து வைத்து சுமார் தன்னை 300 தடவைகள் இராணுவத்தினர் கற்பழித்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். அவரை சிகரெட்டால் இராணுவத்தினர் சுட்டு, சித்திரவதை செய்தமையும் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது.

இதனைத் தவிர மேலும் ஒரு பெண் தனது சாட்சியத்தையும் பதிவுசெய்துள்ளார். இலங்கை இராணுவத்தினர் தம்மை பல தடவை கற்பழித்ததாக அவர் நேரடியாகவே ஐ.ரிவிக்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமருக்கு இதனால் பல அழுத்தங்கள் செல்ல ஆரம்பித்துள்ளது. இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றுள்ள இலங்கைக்கு பிரித்தானியப் பிரதமர் செல்லவேண்டுமா என்று தற்போது வெள்ளை இனத்தவர்களே கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்கள்.