சனி, மார்ச் 29, 2014


சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாள்ர் மாற்றப்பட்டுள்ளார்.
முதலில் பாமக வேட்பாளராக கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு மணிரத்னம் என்பவர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ளார்.
மணிரத்னம் ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். திருமாவளவனுடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிய அவர் பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திருமாவளவனை எதிர்த்து போட்டியிடுவது என்ற எண்ணத்தில் இருந்த அவருக்கு காங்கிரஸில் சீட் கிடைக்கவில்லை.இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 2 தினங்களுக்கு முன் பாமகவில் தன்னை இணைத்துகொண்டார்.