செவ்வாய், மார்ச் 15, 2016

ஆலய பூஜையால் பெண் மரணம்?


அனுராதபுரம் நெல்லிக்குளம் எலயாபத்துவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளார். 
சுகவீனம் காரணமாக ஆலயத்தில் நடத்தப்பட்ட பூஜை ஒன்றினால், சுகவீனம் அதிகரித்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
தொலபிள்ளே பள்ளியகெதர தனுஷியா குமாரி சந்திரரத்ன என்ற 36 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவரது கணவர், கட்டுகெலியாவ பிரதேசத்தில் நடத்தி வரும் ஆலயத்திற்கு கடந்த 12 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டு இன்று அதிகாலை வரை பூஜை நடத்தப்பட்டுள்ளது.
இந்த மரண சம்பவம் தொடர்பான ஆலயத்தின் பிரதான பூசகர் மற்றும் இரண்டு உதவியாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmuyDSYSXnw0A.html#sthash.ACv45u2m.dpuf