புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2016

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா

சுவாதியை பின்பக்கமாக இருந்து வெட்டியது தென் மாவட்ட கூலிப்படை வாலிபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக வெற்றிக்காக 700 கோடி வாங்கினாரா விஜயகாந்த்? புயலை கிளப்பும் புகார்

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால்

36 அகதிகள் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்!

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 36 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

திருச்சியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: 157 பேர் உயிர் தப்பினர்

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில்

கோத்தாவை குறுக்கறுக்கும் கேள்விகளால் துளைக்கும் தீவான் தவராசா (சட்டத்தரணி )

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் கடந்த 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்கதல் நடாத்தப்பட்டது.
இதன்போது கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் பொன்னுசாமி கார்த்திகேசு சிவாஜி, சிவலிங்கம் ஆருரன், பத்மநாதன் ஐயர்அல்லது ஸ்கந்தராஜ சர்மா, சந்திரபோஸ் செல்வராஜா, சாள்ஸ் தயாளன் ஆகியோர் எதிராளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டதுடன்,
13 தடயப் பொருட்களும் 41 சாட்சிகளும், பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5ம் அத்தியாயம், தண்டனை சட்டக்கோவையின் 113(அ( 102 உள்ளிட்ட பிரிவுகள் உட்பட அவசரகால ஒழுங்கு விதியின் 25(1)பிரிவின் கீழும் குற்றம் புரிந்துள்ளதாக குற்றப்பகர்வு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில்,
முதலாவது சாட்சியாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் சாட்சியத்தை சிரேஸ்ட அரச சட்டத்தரணி நெறிப்படுத்துகையில்,
சாட்சி தனது சாட்சியத்தில் தான் 1971ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து 1988ம் ஆண்டு லெப்டினன்ட் கேர்ணலாக பதவிஉயர்வு பெற்று 1991ம் ஆண்டு வரை சேவையாற்றியதாகவும், பின்னர் இராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றதாகவும், பின்னர் நாட்டின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2005ம் ஆண்டு பாதுகாப்புச்செயலாளராக கடமையாற்றியதாகவும் சாட்சியமளித்ததுடன்,
மேலும் தனது சாட்சியத்தில் தான் பாதுகாப்புச் செயலாளராக பதவி ஏற்கும் பொழுது போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்ததாகவும், எனினும் அதன்போதும் புலிகள் பேர் ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்ததாக உளவுத் தகவல் ஊடாக தாம் உறுதி செய்து கொணடதாகவும், அக் காலப்பகுதியில் புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்தாகவும் சாட்சியமளித்ததுடன்,
இக் கால கட்டத்தில் வவுனியாவில் பெரும்பாலான பகுதிகளும் கிழக்கில் மூன்றில் இரண்டு பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், தனக்கு கிடைத்த உளவுத் தகவல்களின்படி அப்பொழுது 35000 பேர் வரை ஆயுதப்படையில் இருந்ததாகவும், 30000 பேருக்கு அதிகமானோர் சுயேச்சையாக புலிகளுடன் இணைந்திருந்ததாகவும் கொழும்பிலும் பல குண்டுத் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் சாட்சியமளித்ததுடன்,
மேலும் 2006ம் ஆண்டு 2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி காலை 10மணி 30 நிமிடமளவில் ஜனாதிபதியுடனும் மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு குழுவின் பிரதானிகளுடன் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வேளையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் வைத்து புலிகளின் தற்கொலைத் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட வேளையில் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கில் முதலாம் மூன்றாம் நான்காம் ஜந்தாம் எதிரிகளின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தாங்கள் சாட்சியிடம் குறுக்கு விசாரணையை மேற்கொள்ளவில்லையென நீதிமன்றிற்கு தெரிவித்த வேளையில் 2ம் எதிரியின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே. வி. தவராசா தான் சாட்சியிடம் ஒரேயொரு கேள்வியை குறுக்கு விசாரணையில் கேட்கவுள்ளதாக நீதிமன்றிற்கு தெரிவித்து,
தனது குறுக்கு விசாரணையில் ஒரேயொரு கேள்வியாக சாட்சியிடம் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏழு ஆண்டுகளின் பின்னர் 2013ம் ஆண்டு தானே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளீர் என வினவிய பொழுது
சாட்சியாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது சாட்சியத்தில் தன்னை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து இதுவரை தான் பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவிடமோ முறைப்பாடு அளிக்கவில்லையெனவும், சம்பவம் இடம்பெற்று ஏழு வருடங்களின் பின்னர் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ஒரேயொரு வாக்கு மூலம் வழங்கியதாகவும் குறுக்கு விசாரணையில் சாட்சியமளித்தார்.
இதனையடுத்து மேலதிக விசாரணை ஆடி மாதம் 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க

சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், ஆசிரியை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னணி

 சேலம் அருகே பேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் வெளியானதால், பள்ளி ஆசிரியை தூக்குப்

ad

ad