புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2018

போர் ­குற்­றச்­சாட்­டு­களில் இருந்து மீளல்

ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் நாளை மறுநாள் உரை­யாற்றும் போதும், ஐ.நா. பொதுச்­செ­யலர் மற்றும் ஐ.நா.
மனித உரி­மைகள் ஆணை­யாளர் ஆகி­யோரைச் சந்­தித்துப் பேசும் போதும், இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்­டு­களை நீக்கும் யோச­னையை முன்­வைக்கப் போவ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி வரு­கிறார்.

எனினும் முன்­வைக்­கப்­போகும் யோசனை என்ன என்­பதை அவர் இன்­னமும் வெளி­யி­ட­வில்லை. அதே­வேளை, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அத்­த­கைய எந்த யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இரா­ணு­வத்­தினர் மீது சுமத்­தப்­ப­டு­கின்ற போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக, ஜனா­தி­பதி என்ன செய்யப் போகிறார் என்­பது தான் முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

இந்த விட­யத்தில் அவர் மூன்று வித­மான வழி­களைப் பின்­பற்­றலாம்.

முத­லா­வது- போர்க்­குற்­றச்­சாட்­டு­களை மறுக்­கலாம்.

இரண்­டா­வது,- அவற்றை நியா­யப்­ப­டுத்­தலாம்.

மூன்­றா­வது- போர்க்­குற்­றச்­சாட்­டு­களை ஏற்றுக் கொண்டு, அதி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­கான வழி­களை முன்­வைக்­கலாம்.

போர்க்­குற்­றங்கள் நடக்­க­வே­யில்லை என்று மறுக்கும் வேலையை ஜனா­தி­பதி ஐ.நாவில் போய் முன்­வைக்க வேண்­டி­ய­தில்லை. ஏனென்றால், போர்க்­குற்­றங்கள் சுமத்த ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் இருந்தே, இலங்கை அர­சாங்கம் அதனைத் தான் செய்து வரு­கி­றது.

சர்­வ­தேச அரங்­கு­களில் மஹிந்த ராஜபக் ஷ ஏரா­ள­மான சந்­தர்ப்­பங்­களில் போர்க்­குற்­றங்­களை நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

எனவே, மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நாவில் போய் இதனைச் செய்ய வேண்டும் என்­ப­தில்லை. அவர் இதனைச் செய்­யப்­போ­வது இது தான் முதல் முறை­யு­மில்லை.

அத்­துடன், போர்க்­குற்­றச்­சாட்­டு­களை ஐ.நாவில் மறுப்­பதால், விளை­வுகள் ஏதும் ஏற்­படப் போவதும் இல்லை. எனவே இதனை ஒதுக்கி விடலாம்.

இரண்­டா­வ­தாக, போர்க்­குற்­றங்­களை நியா­யப்­ப­டுத்­து­வது போரின் போது மீறல்கள் நடந்­தன என்­பதை ஏற்­றுக்­கொள்­வது, ஆனால், அது அந்தச் சூழ்­நி­லையில் தவிர்க்க முடி­யா­தது என்று நியா­யப்­ப­டுத்தும் வழி­முறை இது.

புலிகள் பொது­மக்­களை கேட­ய­மாகப் பாவித்­தனர், அதனால் வேறு வழி­யில்லை, மூன்று இலட்சம் பேரை மீட்­ப­தற்கு சில ஆயிரம் பேரை பலி கொடுத்­ததில் தவ­றில்லை. பயங்­க­ர­வாத எதிர்ப்புப் போரை நடத்­திய ஒரு அர­சாங்­கத்­துக்கு வேறு தெரிவு இருக்­க­வில்லை, பல ஆயிரம் படை­யி­னரில் சிலர் தவ­று­களைச் செய்­தி­ருக்­கலாம், ஒட்­டு­மொத்த இரா­ணு­வமும் போர்க்­குற்றம் புரி­ய­வில்லை, இப்­ப­டி­யான வாதங்­களை முன்­வைத்து, மீறல்­களை நியா­யப்­ப­டுத்தக் கூடும்.

இவ்­வா­றான நியா­யப்­ப­டுத்­தல்கள் சில ஏற்­க­னவே அரச தரப்­பி­லுள்­ள­வர்­களால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது தான்.

ஆனாலும், இவ்­வா­றான நியா­யப்­ப­டுத்தல் எதுவும் ஜனா­தி­ப­தி­யினால் அதி­கா­ர­பூர்­வ­மாக முன்­வைக்­கப்­பட்­ட­தில்லை.

எனினும், இவ்­வாறு நியா­யப்­ப­டுத்தும் போது சில விட­யங்­களை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டாலும் எல்­லா­வற்­றையும் ஏற்­றுக்­கொள்ளும் என்­றில்லை.

அவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விட­யங்கள் குறித்து நம்­ப­க­மான விசா­ரணை நடத்தி, குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றே சர்­வ­தேசம் வலி­யு­றுத்தும்.

மூன்­றா­வ­தாக, படை­யினர் மீதுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டு­களை ஏற்­றுக்­கொள்­வது. அதா­வது, ஒட்­டு­மொத்த இரா­ணு­வமும் குற்­ற­மி­ழைக்­க­வில்லை. சிலரே இதில் ஈடு­பட்­டனர். அவ்­வா­றா­ன­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்து, இந்தக் குற்­றச்­சாட்டில் இருந்து இரா­ணு­வத்தை விடு­விக்கும் வழியைத் தேடிக் கொள்­வது.

இந்த வழி­மு­றை­யிலும் கூட பல்­வேறு சிக்­கல்கள் இருக்­கின்­றன. முதலில் போர்க்­குற்­றங்­களை அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும். அதில் தொடர்­பு­டை­ய­வர்­களை இனங்­காண வேண்டும். அதற்குப் பின்னர் தான், எஞ்­சி­ய­வர்­களை அதி­லி­ருந்து விடு­விக்க முடியும்.

இந்த நிலையில் தான், போர்க்­குற்­றச்­சாட்டில் இருந்து இரா­ணு­வத்தை விடு­விப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால முன்­வைக்கப் போகும், திட்டம் என்ன என்ற எதிர்­பார்ப்பு பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது.

ஏனென்றால் அவர் இதனை சாதா­ர­ண­மாக முன்­வைத்து விட­மு­டி­யாது. அவர் இந்தத் திட்­டத்தை முன்­வைத்­தி­ருக்­கிறார் என்­பதால், தமது பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான எல்லா முயற்­சி­க­ளையும் சர்­வ­தேசம் கைவிட்டு விடப் போவ­து­மில்லை.

இந்தக் கட்­டத்தில் தான், அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சில யோச­னை­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அதில் முக்­கி­ய­மா­னது, விடு­தலைப் புலிகள் மற்றும் இலங்கை இரா­ணு­வத்­தினர் மீதுள்ள போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளிப்­பது.

இரண்டு தரப்­பிலும் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பொது­மன்­னிப்பு அளித்து இந்தப் பிரச்­சி­னையை முடி­வுக்குக் கொண்டு வரு­வது தான் அவ­ரது திட்டம்.

விடு­தலைப் புலிகள் என்ற குற்­றச்­சாட்டில், அல்­லது விடு­தலைப் புலி­க­ளுக்கு உத­வி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டில், 107 அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் இன்­னமும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் சிலர் தண்­டனை பெற்­றுள்­ளனர். சிலர் வழக்­கு­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்த அர­சியல் கைதி­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளித்து விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்­பெற்­றி­ருக்கும் நிலையில், இந்தச் சந்­தர்ப்­பத்தைச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, போர்க்­குற்றம் இழைத்த இரா­ணு­வத்­தி­னரை விடு­விக்கும் யோச­னையை முன்­வைத்­தி­ருக்­கிறார் சம்­பிக்க ரண­வக்க.

இரா­ணுவம் போர்க்­குற்­றமே செய்­ய­வில்லை என்று சாதித்து வந்­த­வர்­களில் அமைச்சர் சம்­பிக்க முக்­கி­ய­மா­னவர். அப்­ப­டி­யி­ருக்க அவரே இன்று போர்க்­குற்­றம்­சாட்­டப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை விடு­விக்க யோச­னையை முன்­வைக்­கிறார் என்றால், இந்தப் பிரச்­சினை அர­சாங்­கத்­துக்கு ஒரு தலை­வ­லி­யா­கவே இருக்­கி­றது என்று தான் அர்த்தம்.

அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க முன்­வைத்­தி­ருக்கும் இந்த திட்­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட­ன­டி­யா­கவே நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது. இரா.சம்­பந்­தனும் இதனை எதிர்த்­தி­ருக்­கிறார். சுமந்­தி­ரனும் நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

தமிழ் அர­சியல் கைதிகள், 9 ஆண்­டு­க­ளுக்கு மேல் சிறையில் இருப்­ப­வர்கள். அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்­குகள் எல்­லா­வற்­றிலும், குற்­றத்தை நிரூ­பிப்­ப­தற்­காக சான்­றுகள் அர­சாங்­கத்­திடம் இல்லை. பலாத்­கா­ர­மாக பெறப்­பட்ட- சட்­டத்தின் முன் வலு­வற்ற குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்­களை வைத்து இந்த வழக்­குகள் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றன.

அவ்­வா­றான அர­சியல் கைதி­க­ளையும், போர்க்­குற்றம் இழைத்­தார்கள் என்று குற்­றம்­சாட்­டப்­படும் இரா­ணு­வத்­தி­ன­ரையும் ஒரே நிலையில் எடை போட முடி­யாது என்­பது சுமந்­தி­ரனின் வாதம்.

மன்னார் - அடம்­பனில், 1986ஆம் ஆண்டு நடந்த ஒரு சண்­டையில், விடு­தலைப் புலி­களால் இரண்டு இரா­ணு­வத்­தினர் சிறை­பி­டிக்­கப்­பட்­டனர். அப்­போது இரா­ணு­வத்­தி­னரின் பிடியில் இருந்த அருணா, காமினி என இரண்டு விடு­தலைப் புலி­களை விடு­வித்து, அந்­த­இ­ரண்டு இரா­ணு­வத்­தி­ன­ரையும் மீட்டுக் கொண்­டது அர­சாங்கம்.

இது­போன்ற ஒரு சில போர்க்­கை­திகள் பரி­மாற்ற சம்­ப­வங்கள் போர்க் கால­கட்­டங்­களில் நடந்­துள்­ளன. பின்னர், புலி­க­ளிடம் சிக்கும் படை­யி­னரின் எண்­ணிக்கை அதி­க­ரித்த போது, அர­சாங்கம் போர்க் கைதிகள் பரி­மாற்­றத்­துக்கு இணங்­க­வே­யில்லை. இதனால் புலிகள் வேறு வழி­யின்றி கட்­டம்­கட்­ட­மாக அவர்­களை விடு­விக்கும் நிலை தான் ஏற்­பட்­டது.

புலி­களின் காலத்தில் போர்க்­கை­தி­களைப் பரி­மாறிக் கொண்­டதைப் போல, இரண்டு தரப்­பு­க­ளுக்கும் பொது­மன்­னிப்பை அளித்து, இனிமேல் போர்க்­குற்ற விவ­கா­ரங்கள் என்று எதுவும் எழாத வகையில் நிலை­மையைச் சமா­ளிப்­ப­தற்கு, அர­சாங்­கத்­துக்குள் உள்ள சிலர் சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

சில வேளை ஜனா­தி­ப­தியின் திட்­டமும் இதனை ஒத்­த­தாக கூட இருக்­கலாம். சம்­பிக்க ரண­வக்­கவின் திட்­டத்­துக்கு எப்­படி எதிர்­வி­னைகள் வரு­கின்­றன என்­பதை பொறுத்து அவர் தனது திட்­டத்தை முன்­வைக்க எண்­ணி­யி­ருக்­கலாம்.

எது எவ்­வா­றா­யினும், தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளிப்­பதன் மூலம், இரா­ணுவத் தரப்பில் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­களை, மறக்கச் செய்து, சமப்­ப­டுத்தி விடும் முயற்­சிக்கு தமிழர் தரப்பு இணங்­கு­வ­தற்குச் சாத்­தி­யங்கள் இல்லை.

ஏனென்றால், இரா­ணுவத் தரப்பின் மீது ஏரா­ள­மான போர்க்­குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்­றன. அவை­யெல்லாம் குற்­றச்­சாட்டு நிலையில் தான் இருக்­கின்­றன என்ற போதும் அதனை ஒப்புக் கொள்ளும் நிலை கூட இன்­னமும் உரு­வா­க­வில்லை.

முதலில் போர்க்­குற்­றங்கள் நிகழ்ந்­தன என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அதற்குப் பின்னர், போர்க்­குற்­றங்கள் எவை என்று அடை­யாளம் காண வேண்டும். அவ்­வா­றான போர்க்­குற்­றங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள் யார் என்­பது இனங்­கா­ணப்­பட வேண்டும்.

அதற்குப் பின்னர் தான் அவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளிக்­கப்­ப­டு­வது பற்றித் தீர்­மா­னிக்க முடியும்.

யார் என்ன குற்­ற­மி­ழைத்­தனர் என்­பதை அடை­யாளம் காணாமல், பொதுப்­ப­டை­யாக பொது­மன்­னிப்பு அளிப்­பது என்­பது, நீதியை எதிர்­பார்த்து நிற்கும் மக்­க­ளுக்கு செய்­யப்­படும் துரோ­க­மாக இருக்கும்.

இங்கு நீதியை எதிர்­பார்த்து நிற்­பது, தனியே தமிழ் அர­சியல் கைதி­களும், போர்க்­குற்றம் சாட்­டப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரும் தான் என்றால், இரண்டு தரப்­பு­க­ளுக்கும் பொது­மன்­னிப்பு அளித்து சமப்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

ஆனால், போர்க்­குற்­றங்­களால் பாதிக்­கப்­பட்ட பெரு­ம­ளவு தமிழ் மக்கள் இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்குத் தேவை­யான நீதியை அளிக்க வேண்டும்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள், படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தினர் பலரும் இன்று கேட்­பது தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையைத் தான். அதற்கு அப்­பா­லேயே, தமக்கு ஏற்­பட்ட அநீ­தி­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­களைத் தண்­டிக்க வேண்டும் என்று கோரு­கி­றார்கள்.

அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்­பு­வது உண்­மையை. என்ன நடந்­தது- யாரால் நடந்­தது - என்ற உண்­மை­களைத் தெரிந்து கொள்ளும் போது, அவர்­களே குற்­ற­மி­ழைத்­த­வர்­களை மன்­னிப்­பதா - இல்­லையா என்ற முடி­வுக்கு வந்து விடு­வார்கள்.

ஏன் இது தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பொருத்­த­மா­ன­தாக இருக்­காதா? நிச்­சயம் என்றால் அவர்­க­ளுக்கும் பொருந்தக் கூடி­யது தான். ஆனால், அவர்கள் செய்­தார்கள் என்று கூறப்­படும் குற்­றத்­துக்­காக நீண்­ட­காலம் சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்­தி­ருக்­கி­றார்கள்.

போர்க்­குற்­றம்­சாட்­டப்­பட்ட இரா­ணு­வத்­தினர் அப்­ப­டி­யில்லை. அவர்கள் இன்­னமும் இனம்­கா­ணப்­ப­ட­வே­யில்லை. அப்­படி முகம் தெரி­யாத போர்க்­குற்ற சந்­தேக நபர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளிக்­கப்­ப­டு­வது நீதி­யல்ல.

தென்­னா­பி­ரிக்­காவில் கூட குற்­ற­மி­ழைத்­த­வர்கள் உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­விடம் தாம் செய்த தவ­று­களை – தாமாக முன்­வந்து ஒப்புக் கொண்­டார்கள். எல்­லோரும் எல்லாக் குற்­றங்­க­ளையும் ஒப்புக் கொள்­ளா­வி­டினும், கணி­ச­மா­ன­வர்கள் தமது குற்­றங்­களை ஏற்றுக் கொண்டார்கள்.

அதனால், பாதிக்கப்பட்ட மக்களால், அவர்களின் தவறுகளை மன்னிக்கும் மனப்பக்குவம் ஏற்பட்டது. மன்னிப்பு அளிப்பது குற்றமிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தண்டனையும் கூட. அந்த மன்னிப்பினால் வாழ்நாள் முழுவதும், குற்றமிழைத்தவர்களால் குற்ற உணர்வில் இருந்து விடுபட முடியாது.

ஆனால் இத்தகைய எந்த பொறிமுறைகளுக்கும் உட்படாமல், போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வருவதற்கே அரசாங்கம் எத்தனிக்கிறது.

உண்மையை வெளிப்படுத்த தயாரில்லாத தரப்புகள் தான், அரசியல் கைதிகள் விவகாரத்துடன் போர்க்குற்றங்களைச் சமப்படுத்தி, இந்தப் பிரச்சினையை தீர்க்க முனைகின்றன.

அரசாங்கத்துக்கு படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தலைவலியாக இருக்கின்றன.

நம்பகமான- நியாயமான விசாரணைகளுக்கு முன்வந்து, உண்மைகளைக் கண்டறியும் போது, போர்க்குற்றங்கள் தொடர்பான அழுத்தங்கள் அழுத்தங்களில் இருந்து விடுபடக் கூடிய வழி இருந்தாலும், அதனை விடுத்து, அரசாங்கம் குறுக்கு வழியிலேயே காரியம் சாதிக்க முனைகிறது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகம் மாத்திரமன்றி, ஐ.நா. போன்ற சர்வதேச சமூகத்தினால் கூட ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் இல்லை

ad

ad