சனி, டிசம்பர் 29, 2018

அமைச்சு பங்கீடு முடிந்தபடில்லை?

கொழும்பு அரசியலில் அமைச்சுக்களின் பங்கீடு இன்னமும் முடிந்த பாடாகவே இல்லாதுள்ளது.அவ்வகையினில் அரச ஊடகங்களான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள், நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் எதிர்வரும் காலங்களில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சு ஜக்கிய தேசிய முன்னணியின் மங்கள சமரவீர வசமுள்ளது.
இதனிடையே காவல் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ளது.அதிலும் பாதுகாப்பு அமைச்சினை தன்னிடம் வைத்துள்ள மைத்திரி பாதுகாப்பு அமைச்சின் கீழ் காவல் திணைக்களம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே குறித்த காவல்துறை விவகாரத்தையும் மைத்திரி தன்வசம் வைத்துள்ளமை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்றம் ஆட்சேபனைகளை வெளியிடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது