புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2019

கோத்­தா­வுக்கு போட்டால் எம்மை போட்டுத்தள்ளுவார்

கோத்­தா­வுக்கு வாக்­குப் ­போட்டால் எம்­மையும் போட்­டு­த்தள்­ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். வவு­னியா திரு­நா­வற்­கு­ளத்தில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் அலு­வ­லகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. குறித்த நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்­கையில், ­

வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுத்­த­ர­வேண்டும் என்ற தெளி­வான ஒரு நிலைப்­பாட்டை கொண்­டவர் தான் சஜித் பிரே­ம­தாச. எமது பகு­திகள் அபி­வி­ருத்தி அடை­யாத நிலையில் உள்­ளன. எமது படித்த இளைஞர் யுவ­தி­க­ளுக்­கு ஒழுங்­கான வேலை வாய்ப்பு இல்லை. சுய தொழில் செய்­வ­தற்கும் மூல­தனம் இல்லை. அனைத்­துமே இல்­லாத நிலை தான் இங்கு இருக்­கி­றது. அதனை மாற்­று­வ­தற்­காகத்தான் எமது ஆட்­சியைக் கொண்­டு­வர இருக்­கின்றோம்.

இந்நாட்­டிலே இனவாதம் மத­வாதம் இருக்க முடி­யாது. நாம் அனை­வரும் சகோதரர்கள். ஒருதாய் பிள்­ளை­க­ளாக வாழ வேண்டும். பெரும்­பான்மை மக்­க­ளுக்குக் கைகட்டி அடிமை சேவகம் செய்துதான் சிறு­பான்மை மக்கள் வாழ­வேண்டும் என்றால் அந்த ஐக்­கியம் மனோ கணே­ச­னுக்கு தேவை­யற்­றது. அனைத்து மக்­களும் சம­மாக வாழ­வேண்டும். அதுவே உண்­மை­யான சமத்­துவம்.

அர­சாங்­கத்தை உரு­வாக்கி விட்டு வெறு­மனே நாம் வேடிக்கை பார்த்­து­க் கொண்டு இருக்­க­மாட்டோம்.

தமிழ் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது, தேர்­தலை பகிஸ்­க­ரிப்­பது, மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு வாக்­க­ளிப்­பது என்­பன கோத்­தாவை ஆத­ரிப்­ப­தா­கவே அமையும். கோத்­தா­விற்கு வாக்குப் போட்டால் எம்மைப் போட்டுத் தள்­ளுவார். வெள்ளை வேன் வரும்.

கடத்தல், காணாமல் போதல் சம்­ப­வங்கள் இடம்­­பெ­றும். எனவே ஜன­நா­ய­கத்­தையும் சுதந்­தி­ரத்­தையும் பாது­காக்க வேண்டும் என்றால் சஜித்­துக்கு வாக்­க­ளி­யுங்கள். எதிர்­வரும் 16ஆம் திகதி வாக்களிப்பு நிலையத்துக்­கு சென்று அந்த கணேசனையும் நினைத்துக்கொண்டு, இந்த கணேசனையும் மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.

ad

ad