புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2019

இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ரணில்; மாலை விசேட உரை

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல் வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

ad

ad