புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2020

கொரோனா வைரஸ்- யாழ்ப்பாணத்தில் வீண் பதற்றம் வேண்டாம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும், தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலை தயாராகவுள்ளதாக அதன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும், தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலை தயாராகவுள்ளதாக அதன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து இலங்கையில் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவ்ர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்று என அடையாளப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து வைத்திய நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கூட்டமொன்றை கடந்த புதன்கிழமை நடத்தினேன்.

இதன்போது, சிகிச்சை பெற வந்திருப்பவர், மேற்படி வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என்ற சந்தேகம் ஏற்படின் வைத்தியசாலையின் இரு வைத்திய நிபுணர்கள் பரிசோதனையை மேற்கொள்வர். இதையடுத்து சந்தேகம் வலுப்பெறமாயின் ஏனைய வைத்திய நிபுணர்களுடன் பேசிய பின்னர் வைத்தியசாலைப் பணிப்பாளரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என்ற சந்தேகத்தை வெளியிடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி வைரஸ் தொற்றுக்குள்ளானவருக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தனியான விடுதி உள்ளிட்ட ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலை தயார் நிலையில் உள்ளது.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தில் கோப்பாய் சுகாதார பரிசோதகர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றார். இவ்வாறான நிலையில் மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad