புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2020

கொரோனா சிகிச்சைக்கு தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்க முன்வந்தசிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரொனால்டோ


கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. ஆட்கொல்லி வைரஸாக உள்ளதால் மக்கள் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். சீனாவை அடுத்து இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நோய்த் தொற்றால் உலகின் பல்வேறு விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சர்வதேச அளவில் பொருளாதாரமும் மந்த நிலையை சந்தித்து வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து தாய் நாட்டுக்குத் திரும்புபவர்களாலும் மற்ற நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா சிகிச்சைக்கு தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்கி, இலவச சிகிச்சை அளிக்க முன்வந்த ரொனால்டோ !
கொரோனா பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் போதிய வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டில் தனக்கு சொந்தமான ஒரு ஹோட்டலை கொரோனா பாதித்தவர்களுக்காக மருத்துவமனையாக மாற்ற முன்வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ பணியாளர்களுக்கான ஊதியத்தை தான் தருவதாகவும் ரொனால்டோ கூறியுள்ளார்.
இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு ரொனால்டோவின் செயலுக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, இத்தாலியில் நடந்த கால்பந்து லீக் ஆட்டத்தின் போது ஜுவெண்டஸ் அணியின் வீரர் டேனியல் ருகானிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டது.
அதனையடுத்து ரொனால்டோ, பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். சோதனைக்கு பிறகு ரொனால்டோவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

ad

ad