புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

தீவகச்செய்திகள்

ஊர்காவற்துறை கர்ப்பிணித் தாய் படுகொலை: மூன்றாவது சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணை
ஊர்காவற்துறையில் கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்றாவது சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (17) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரிதொரு கொலை வழக்கின் சந்தேகநபராக மன்றில் ஆஜர்படுத்தப்படும் ஒருவரிடம் கர்ப்பிணித் தாயின் படுகொலை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புங்குடுதீவைத் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரிடமே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களில் வழக்கிற்கு சம்பந்தப்படாத பொருட்களை அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.
வழக்கிற்கு சம்பந்தப்படாத உடைமைகளை சந்தேகநபர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய சந்தேகநபர் ஒருவரின் 35,370 ரூபா பணமும் அவருடைய தேசிய அடையாள அட்டை மற்றும் பணப்பை ஆகியவற்றை நீதவான் முன்னிலையில் சந்தேகநபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த சந்தேகநபரின் 110 ரூபா பணத்தையும் அவரின் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து பதில் நீதவான் ஆர் சபேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad