புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2012

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்!- ஸ்ரீராம் சேனா அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:29.42 AM GMT ]
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையில் 40 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அடிப்படை உரிமை கூட இல்லாமல் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர்.
பல்லாயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையை ஏற்படுத்திய இலங்கை இராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
போராட்டத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறியுள்ளார்.
இது குறித்து, இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது.
அங்கு 40 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல், அடிமைகள் போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்திற்கு பெங்களூரில் பயிற்சி தருவது சரியான முடிவல்லை. இந்த பயிற்சி என்பது ஒரு திட்டமிட்ட சதியாகும்.
இந்த பயிற்சியை எப்படி இந்திய அரசு தரலாம். இது நியாயமற்ற செயல்.
இலங்கையில் தமிழர்கள் மூன்றாம் தர மக்களைப் போல நடத்தப்படுகிறார்கள். இதுவரை அங்கு ஏழரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இந்தச் சூழ்நிலையில் இலங்கை இராணுவத்தினருக்கு பெங்களூரில் பயிற்சி தருவதை எதிர்த்து எலஹங்கா விமானப்படை நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். அது உறுதி, 100 சதவீதம் உறுதி.
போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் முத்தலிக்.

ad

ad