புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2012

50-வது பிறந்த நாள்: திருமாவளவனுக்கு கருணாநிதி-டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 50-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர். 


பட்டிணபாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கு சென்று திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். 

பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினர். அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் வாழ்த்து தெரிவித்தனர். 

கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை திருமாவளவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், சற்குணபாண்டியன், முன்னாள் அமைச்சர் மதிவாவணன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், சேகர்பாபு. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், ராமசுப்பு எம்.பி., பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சி.எஸ்.ஐ. பேராயர் தேவசகாயம், பேராயர் எஸ்றா சற்குணம், தொழில் அதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, வி.ஜி.பி.சந்தோசம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்பழகன், நடிகர் சத்யராஜ், நடிகை குஷ்பூ ஆகியோர் வாழ்த்து கூறினார்கள். 

உலகத் தமிழ் பன்னாட்டு இயக்க தலைவர் கணேசலிங்கன், கனடாவை சேர்ந்த ரஞ்சன், வாஷிங்டனில் இருந்து சிவா, ஈழத்து எம்.பி. ஸ்ரீதரன் ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு திருமாவளவனுக்கு வாழ்த்து கூறினார்கள். 

பிறந்தநாளையொட்டி சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு, காலை உணவு ஆகியவற்றை திருமாவளவன் வழங்கினார். கோயம்பேட்டில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். 

வர்த்தக பிரிவு சார்பில் திருமாவளவனுக்கு 100 பவுன் தங்க காசு வழங்கும் விழா இன்று மாலை கோயம்பேட்டில் நடக்கிறது. முன்னதாக அவருடைய பிறந்தநாளையொட்டி நேற்று பொன்விழா கவியரங்கம் நடந்தது. வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வாலி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கவிலனின் தொல்காப்பியம் தமிழ் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை திருமாவளவன் வெளியிட கலைப்புலி தாணு பெற்றுக்கொண்டார். 

கவிஞர்கள் பழனிபாரதி, கபிலன், யுகபாரதி, இளையகம்பன், அண்ணாமலை, தமிழமுதன் ஆகியோர் கவிதை படித்தனர். அதைத் தொடர்ந்து திருமாவளவனின் எடைக்கு எடை நாணயத்தை நிர்வாகிகள் வன்னிஅரசு, மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், தகடூர் தமிழ் செல்வன் ஆகியோர் வழங்கினார்கள். தொண்டர்கள் சார்பில் முக்கனிகள் பரிசாக கொடுக்கப்பட்டன. 

நள்ளிரவு 12 மணிக்கு திருமாவளவன் பிரமாண்ட கருப்பட்டி வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். விழாவில் வன்னிஅரசு, தமிழ்செல்வன், வெற்றிச்செல்வன், நெற்குன்றம் ரூபஸ், நீல.தமிழேந்தி, இரா.செல்வம், இளங்கோ, பிரபாகரன், அம்பேத்மகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad