புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012


கொழும்பு புறநகர் கடற்பரப்பில் கப்பல் ஒன்று மூழ்கிக் கொண்டிருக்கிறது!- கரையோரங்களுக்கு எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடற்பரப்பில் தரித்து நிற்கும் கிரேக்க கப்பல் காரணமாக கொழும்பு மற்றும் களுத்துறை கரையோர பிரதேசங்களில் பாரிய சுற்றாடல் பிரச்சினை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
24ஆயிரம் தொன் எடையைக் கொண்டதும், சுமார் 1000 லீற்றர் இரசாயனப் பொருட்கள் மற்றும் 275 தொன் எரிபொருள் ஆகியவற்றை கொண்டுள்ள இந்த கப்பல் கப்பல்சேவை சட்டத்தை மீறியமைக்காக 2007 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இதுவரையும் 220 மில்லியன் ரூபாய்களை துறைமுக கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் இந்தக் கப்பல் தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கப்பல் முழுமையாக கடலில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக்கப்பலில் உள்ள இராசாயனப் பொருட்கள் மற்றும் எரிபொருள் காரணமாக கொழும்பு மற்றும் களுத்துறை பிரதேசங்களின் கரையோரங்களும் அதேநேரம் கடல் வளங்களும் பாதிக்கப்படும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், இது தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவின் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ad

ad