புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2012


த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு
அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனையின் எல்லைகாவலனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினருமான ஏகாம்பரம் தலைமையில் கல்முனையில் வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது அனைத்து வேட்பாளர்களும் அறிமுகம் செய்து உரையற்றியாற்றியதுடன், கூட்டத்துக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியொரும் உரையாற்றினார்கள்.
வன்னியில் நடந்த இன அழிப்பு போர் பற்றியும், அங்கே நடந்த அழிவுகள் பற்றி செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றினார். தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் ஆதரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சுமந்திரன் அவர்கள் உரையாற்றினார்.
அபிவிருத்தி, அபிவிருத்தி என்று கூறும் முன்னாள் முதலமைச்சர், ஆட்சியில் இருக்கும் போது தமிழர்களின் காணிகளை அபகரிக்க காரணமாக இருந்தவர்கள், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு விட்டு, ஜப்பான் அரசாங்கத்தினால் நிதி ஒதுகிட்டில் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை தாங்களே மேற்கொள்வதாக கூறி வருகின்றனர் என்று பொன்.செல்வராஜா உரையாற்றினார்.
எதிர்வரும் 23 ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து கல்முனையில் மாபெரும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

ad

ad