புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2012


டெசோ மாநாடு வை.எம.சி.ஏ மைதானத்தில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது
டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து நிபந்தனையுடன் மாநாட்டை நடாத்த அனுமதியளித்துள்ளது. 
சென்னை ராயப்பேட்டை மைதானத்தில், நிபந்தனையின் அடிப்படையில் மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நிபந்தனைகளை காவல்துறை மாநாட்டு அமைப்பாளர்களிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, மாநாடு ராயப்பேட்டை மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12 மணிக்குக் கூடிய நீதிமன்றம் சிறப்பு வழக்காக இதனை எடுத்து விசாரித்தது.
நீதிபதி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இதில், மாநாட்டுக்கு நிபந்தனையுடன் கூட அனுமதி அளிக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
நிபந்தனைகள்
8000ற்கு மேற்பட்டவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது
அருகில் மருத்துவமனை அமைந்திருப்பதால் ஒலிபெருக்கி அதிக சத்தத்துடன் ஒலிபரப்பக்கூடாது
வாகன நெரிசல் ஏற்படாதவாறு மாநாட்டை நடத்த வேண்டும்
ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ad

ad