புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2012

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.25 மணியளவில் நடந்தது. 
இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜெட்டர், பெலிக்ஸ், மேடிசன் ஆகியோரும், ஜமைக்காவை சேர்ந்த வெர்னிக்கா, கேம்ப்பெல், பிரேசர் பிரைஸ் மற்றும் பேப்டிஸ் (டிரினிடாட்),

அகவுர் (ஐவேரி கோஸ்டர்) ஒககாபர் (நைஜீரியா) ஆகிய 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஜமைக்கா வீராங்கனை பிரேசர் மின்னல் வேகத்தில் ஓடி வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 10.75 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். பிரேசர் பிரைஸ் 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார். அவர் உலக சாம்பியனான கேமிலிட்டா ஜெட்டரை தோற்கடித்தார். 

அமெரிக்காவை சேர்ந்த உலக சாம்பியனான ஜெட்டர் 10.78 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஜமைக்காவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான வெரோனிக்கா கேம்ப்பெல் 10.81 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். 

உலகின் அதிவேக வீரர் யார் என்பதற்காக ஆண்கள் 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 2.20 மணிக்கு நடக்கிறது. உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான உசேன் போல்ட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டும். அவருக்கு யோகன் பிளேக், ஆசபா போவெல் (ஜமைக்கா), டைசன் காய் (அமெரிக்கா) கடும் சவாலாக இருப்பார்கள் என்று தெரிகிறது. 

நேற்று நடந்த மற்ற போட்டிகளான ஆண்கள் நீளம் தாண்டும் போட்டியிலும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் இங்கிலாந்து தங்கம் வென்றது. ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் சீனாவும், பெண்கள் வட்டு எறிதலில் குரோஷியாவும் தங்கம் வென்றன.

ad

ad