புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


தமிழக சட்டப்பேரவை சபாநாகயர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ஜெயக்குமார்!


தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் ராஜினாமா செய்தார். பேரவைத் தலைவர் பணிகளை துணைத் தலைவர் தனபால் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையின் வைர விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. மேலும் சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட உள்ள நிலையில் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா, எம்ஜிஆர் பிறந்த நாள் மட்டுமே அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஜெயக்குமாரின் பிறந்த நாள் சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் சுவரொட்டிகளில் அடுத்த முதல்வர் என்று குறிப்பிட்டு வாசகங்கள் இருந்தன. இந்த செய்தி ஜெ. கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கான புதிய கட்டித்தை திறந்து வைப்பதற்காக ஜெ. சென்றபோது, ஜெயக்குமாருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஜெ.வின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஜெயக்குமார் ஆளானார்.

இதன் எதிரொலியாக ஜெயக்குமார் படம் போட்டு கட் அவுட் வைத்திருந்த மா.செ. புரசை கிருஷ்ணனை பொறுப்பில் இருந்து தூக்கிவிட்டு, பாலகங்காவை மா.செயலாளராக நியமித்தார். மேலும் சிலரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ad

ad