புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2012


இலங்கையை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி
கேப்டன் சமி பேட்டிங் தேர்வு செய்தார்.

கெய்லும், சார்லசும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. மாத்யூஸ் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் குலசேகராவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து கெய்லுடன் சாமுவேல் ஜோடி சேர்ந்தார். வழக்கமாக அதிரடி காட்டும் கெய்ல் இலங்கை வீரர்களின் பந்து வீச்சில் ரன் சேர்க்க திணறினார். 16 பந்துகள் சந்தித்து 3 ரன்களே எடுத்த நிலையில் மெண்டிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து பிராவோ களம் இறங்கினார். இருவரும் இலங்கை பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு விளையாடி வந்தனர். பிராவோ 19 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சாமுவேல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அதன் பின் வந்த பொல்லார்டு 2, ரசல் 0 ஆகிய ரன்னில் அவுட் ஆகினர். சாமுவேல் 56 பந்தில் 78 ரன் குவித்து அவுட் ஆனார். சமி 26 ரன் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது.

138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் தொடங்கியது. 2-வது ஓவர் முதல் பந்தில் தில்ஷன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின் வந்த எந்த வீரர்களும் சரியாக ஜொலிக்காததால் இலங்கை அணி 18.4-வது ஓவரில் 101 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது.

ad

ad