புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2012


எங்கு இருக்கிறார் துரைதயாநிதி? 
அனுஷா துரைதயாநிதியிடம் போலீசார் விசாரணை! 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார். 

இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் கிரானைட் குவாரிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். 2 மாதமாக நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு கோடிகளை குவித்த கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பி.ஆர்.பி. உள்பட பல கிரானைட் குவாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
துரைதயாநிதியின் உறவினர்கள், நண்பர்களுக்கு மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மு.க.அழகிரியின் மருமகன்கள், உறவினர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துரை தயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீத்தாராமன், பாலாஜி, முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகிய 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில், முன்னாள் துணை மேயர் மன்னன் 06.10.2012 அன்று ஆஜரானார். இன்று (07.10.2012) துரைதயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீத்தாராமன் ஆகியோர் மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள்.
அவர்களுடன் மு.க.அழகிரி மனைவி காந்தி அழகிரி, வக்கீல்கள் ரஜினி, மோகன்குமார், உதயநிதி, தி.மு.க. பிரமுகர் முபாரக் மந்திரி ஆகியோரும் வந்திருந்தனர்.
அனுஷா மற்றும் சீத்தாராமனிடம் தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. துரைதயாநிதி எங்கு இருக்கிறார்? அவரது இருப்பிடம் குறித்து எதுவும் தெரியுமா? தொலைபேசியில் தொடர்பு கொண்டாரா? என்று கேள்விகள் கேட்டனர். 

ad

ad