புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2012

இறந்த கைதிகளை அடையாளங்காண்பதற்கு நடவடிக்கை;உறவினர்களால் நிரம்புகிறது சிறைச்சாலை
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை, மீண்டும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தொலைபேசிகள் மற்றும் போதைப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதயைடுத்து நேற்றுப் பிற்பகல் சிறைக் கூடத்தில் கலவரம் ஏற்பட்டது.

அதனையடுத்து கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் தமது நடவடிக்கையின் மூலம் இன்று அதிகாலை நிலைமையை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அத்துடன் சிறைச்சாலையின் நடவடிக்கைகள் அனைத்தும் அதிரடிப்படையின் கட்டுப்பாட்டுக்குளேயே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று தங்களது கட்டுப்பாட்டிலிருந்த சிறைச்சாலை செயற்பாடுகளை முற்றாக விடுவித்து மீண்டும் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் இராணுவம் கையளித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, சிறைச்சாலை, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எனினும் இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்புக்காக சிறைச்சாலைக்கு வெளியே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த 16 கைதிகளின் உடல்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் சிறைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலையைச் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவம் குறித்து நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad