புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2012


சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு ஆறு அம்சப் பரிந்துரை; சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளை முன்வைப்பு
சிறிலங்காவின் அயல்நாடாக சக்திமிக்க, செல்வாக்குச் செலுத்தும் இந்தியா, சிறிலங்காவில் வாழும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும் த் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியக் கிளை,
சிறிலங்கா தொடர்பில், இந்தியாவுக்கு ஆறு அம்சங்கள் கொண்ட பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இந்த விடயங்களின் அடிப்படையில் சிறிலங்கா தொடர்பில் இந்திய அரசு நடைமுறைகளை கையாள வேண்டும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,

01) "சிறிலங்காவில் இடம்பெற்ற, இடம்பெறும் படுகொலைகள், சித்திரவதைகள், காணாமற் போதல்கள், கடத்தல்கள், தடுத்து வைக்கப்படுதல் போன்ற மனிதவுரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்ளும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு, அனைத்துலகச் சட்டத்திற்கமைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும்"

02) "கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியங்களைப் பதிவு செய்து கொண்டவர்களின் வாக்குமூலங்களைக் கொண்டு உரிய விசாரணைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும்"

03) "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கம் செய்வதுடன், நிர்வாக ரீதியாகத் தடுத்து வைக்கும் முறைமை நீக்கப்படவேண்டும்"

04) "சந்தேகத்தின் பேரில் அவசரகால மற்றும் பயங்கரவாதச் சட்டங்களுக்கு கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றமற்றவர் என உறுதிப்படுத்தப்படுவோர் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், ஏனையோர் அனைத்துலகச் சட்டங்களுக்ககு அமைவாக விசாரிக்கப்படுதல்"

05) "தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படல் வேண்டும்"

06) "தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம் போன்ற முதன்மையான திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதியான, பயனுள்ள மனித உரிமைகள் நடைறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்". என்பன.

2008ல் சிறிலங்கா அரசாங்கமானது இவ்வாறான பரிந்துரைகளைத் தான் நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கியிருந்த போதும், சில மாதங்களில் தான் வழங்கிய வாக்குறுதியை மீறி நடந்துகொண்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

சக்திமிக்க, செல்வாக்குச் செலுத்தும் சிறிலங்காவின் அயல்நாடான இந்தியா, சிறிலங்காவில் வாழும் சாதாரண மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும் எனவும் அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad