புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012

 புங்குடுதீவில் சகல வசதிகளையும் உள்ளடக்கக்கூடிய கட்டடங்களை கொண்ட மாவட்ட மருத்துவமனை ஒன்று உண்டு . ஆனாலும் அங்கு வாழும் மக்கள் வைத்திய சேவையை பெறுவதற்குரிய நிரந்த மருத்துவர் இல்லாமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும் . இவ் வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும்
வே . சு . கருணாகரன் ஆலோசகர் - சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் ) .

சகல பிரதேசங்களுக்கும் சுகாதார சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் கொழும்பு ,
கண்டி மாவட்டங்களிலுள்ள சுகாதார வசதிகள் ஏனைய மாவட்டங்களுக்கும் கிடைத்திடவேண்டும் . நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலிருந்து அதியுயர் சுகாதார சேவையை பெறுவதற்காக கொழும
்பை நோக்கி வரும் நிலை மாறி அந்தந்த மாவட்டங்களில் அதியுயர் வைத்திய சேவையை பெறக்கூடிய நிலை உருவாகவேண்டும் . குறிப்பாக வடக்கிலும் , கிழக்கிலும் அனைத்து சுகாதார வசதிகளிலும் அதியுயர் முன்னேற்றம் தேவைப்படுகின்றது . யாழ் போதனா வைத்தியசாலையில் இட நெருக்கடிகளை குறைப்பதற்கு வைத்தியசாலையின் சில பிரிவுகளையும் , விடுதிகளையும் அயலிலுள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் . யாழ். நகரிற்கு மிக அண்மையிலுள்ள நீர் வளமும் , நில வளமும் உடைய " அல்லைப்பிட்டி " பிரதேசம் இதற்குரிய பொருத்தமான இடமாகும் . இதன் மூலம் இட நெருக்கடிகளை தவிர்த்திடலாம் . போதனா வைத்தியசாலையிலிருந்து நகர்த்தப்படும் நோயாளர் பிரிவுகள் அயல் பிரதேசங்களில் அமைவதால் பிரதான வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்வதும் , நோயாளர்களை இடம் மாற்றுவதும் சுலபமாயிருக்கும் . புங்குடுதீவில் சகல வசதிகளையும் உள்ளடக்கக்கூடிய கட்டடங்களை கொண்ட மாவட்ட மருத்துவமனை ஒன்று உண்டு . ஆனாலும் அங்கு வாழும் மக்கள் வைத்திய சேவையை பெறுவதற்குரிய நிரந்த மருத்துவர் இல்லாமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும் . இவ் வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும் . வே . சு . கருணாகரன் ஆலோசகர் - சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் ) .

ad

ad