புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச ஆதரவு!– சுனந்த தேசப்பிரிய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் என்று அழைக்கப்படும் அமைச்சர் விமல் வீரவன்ச, 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தத்தை ரத்துச்செய்யுமாறு விமல் வீரவன்ச கோருவதற்கு உயர்மட்ட ஆதரவு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2010 ல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது விமல் வீரவன்ச இந்தக் கோரிக்கையை முன்வைத்தே பிரசாரங்களை மேற்கொண்டார்.
இதனையடுத்து இலங்கையின் சிங்கள கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தின.
இந்தநிலையில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோரும் பிரசாரத்தை தற்போது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழிநடத்துகிறார்.
அவர் மூன்று தடவைகளில் வெளிப்படையாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை தமது கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச, மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களிடமும் ஆதரவை பெற்றுள்ளார்.
இந்த செய்திக்கு இலங்கையின் அரச பத்திரிகைகள் முன்னுரிமை கொடுத்திருந்தன.
இதற்கிடையில் 13 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை ரத்துச்செய்ய சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று விமல் வீரவன்ச கோரி வருகிறார்.
அதேநேரம் வடக்குகிழக்கின் தமிழ் மக்கள் மத்தியில் தனிஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்களும் கோரி வருகின்றனர்.
எனவே புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையும் விமல் வீரவன்சவின் கோரிக்கையும் ஒன்றாகவே அமைந்துள்ளது.
எனவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசையை நிலைநாட்டுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் கோரப்படும் சர்வஜன வாக்கெடுப்புக்கு அமைச்சர் விமல் வீரவன்சவும் உதவுகிறார் என்றே கருத வேண்டியுள்ளதாக சுனந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad