புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலரது விளக்கமறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் என்று கூறப்படுபவரை எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது
நடராசா பூவராசு என்பவரையே விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சரத் பத்தேவெல, நீதிமன்றத்தில் பிரசன்னமாகி, சந்தேக நபர் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் மேலதிக நடவடிக்கை குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
பூவராசு கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவர் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இலங்கை இராணுவத்துக்கு எதிராக பல தாக்குதல்களில் ஈடுபட்டதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளர் மன்றில் குறிப்பிட்டார்.
இதன்பின்னர் 1994ம் ஆண்டு அவர் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலராக செயற்பட்டு வந்ததாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ad

ad