புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2012

30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்கும். 
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்ற
இந்திய அணி, லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தைப் பிடித்தது. 

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதியது. துவக்கத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 12-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார் நிதின் திம்மையா. 

இதற்கு பதிலடி கொடுக்க பெல்ஜியம் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கோல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்தனர். அதேசமயம் இந்திய அணியாலும் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. 

எனவே, இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்கும். 

முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, 2-1 என்ற  கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியை வென்று அரையிறுதியை உறுதி செய்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெர்மனி அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதியில் நெதர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது.

ad

ad